50 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏராளமான அவமானங்களையும் சந்தித்து விட்டேன் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் செயல் பணி செய்து கிடப்பதே என்று கடமையை ஆற்றிவருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் விலக்கு மசோதா அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தேவைப்பட்டால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


தனக்கு அவமானம் ஏற்பட்டாலும், தமிழக மக்களுக்கு நன்மை கிடைக்குமாயின்  அதனை ஏற்க தயாராக உள்ளேன் என்று முதல்வர் தெரிவித்தார்.


நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராகவும் சட்டப்பேரவையின் மாண்பை மதிக்காமலும் காலம் தாழ்த்தியதன் காரணமாகவே ஆளுநருடன் ஆன தேனீர் சந்திப்பைப் புறக்கணித்தேன் என்றும், ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு இடையே சுமுகமான உறவு என்பது தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.


110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த மசோதா ஆளுனர் மாளிகை வளாகத்தில் தூங்கி கிடக்கிறது. இதுவரை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம்தாழ்த்தி வருகிறார் என்று தனது வருத்தத்தையும் முதல்வர் பதிவு செய்தார்.


இந்த நிலையில் தமிழக மக்களுக்கு எதிரான இந்த செயலுக்கு எதிர்ப்பு வகையிலும் சட்டப்பேரவையின் மாண்பை பாதுகாக்கும் வகையிலும் அவருடனான தேநீர் விருந்தை  புறக்கணிப்பதாக மேலும் இதுகுறித்து அவரிடம் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார் 


ஆளுநருக்கும் தனக்கும் இடையே எவ்வித தனிப்பட்ட விரோதமும் இல்லை, ஆளுனர் பழக இனிமையானவர் எங்களுக்கு உரிய மரியாதையை ஆளுநர் அளித்து வருகிறார் நாங்களும் அதற்கு உரிய மரியாதையை அளித்து வருகிறோம் அரசியல் என்னை கடந்து பண்பாட்டை பாதுகாப்போம் என்பதே தனது கருத்து என்று முதலமைச்சர் தெரிவித்தார்.



மேலும் படிக்க | ஆளுநருடன் சுமூக உறவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!


தனது 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் எத்தனையோ வழிகளில் எத்தனையோ அவமானங்களையும் சந்திக்க இருப்பதாகவும் அதனை புறந்தள்ளிவிட்டு என் என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அடிப்படையிலேதான் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்


எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் அவமானம் ஆகியவற்றால் தமிழகத்திற்கு மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் அதனை நான் ஏற்பேன் எனவும்  அவர் தெரிவித்தார்.


எனவே தமிழக ஆளுநர் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய அனுப்பப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் எனவும் மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேவைப்பட்டால் அனைத்து கட்சி கூட்டத்தில் கேட்கவும் தயாராக இருப்பதாகவும் இதில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | சேவை குறைபாடு : ஐசிஐசிஐ, ஏர்டெல்லுக்கு அபராதம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR