சேவை குறைபாடு : ஐசிஐசிஐ, ஏர்டெல்லுக்கு அபராதம்

செல்போன் சேவை குறைபாட்டால் வாடிக்கையாளர் இழந்த ரூ.4.89 லட்சம் ரூபாயையும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்ச ரூபாயையும் வாடிக்கையாளருக்கு வழங்க ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Apr 18, 2022, 10:49 AM IST
  • ஏர்டெல் சிம்கார்டை முடக்கி நூதனக் கொள்ளை
  • சேவைக்குறைபாட்டிற்காக நுகர்வோர் ஆணையத்தில் புகார்
  • ஐசிஐசிஐ, ஏர்டெல்லுக்கு அபராதம்
சேவை குறைபாடு : ஐசிஐசிஐ, ஏர்டெல்லுக்கு அபராதம்  title=

ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெய்டு செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்த சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஜெ.யேசுதயன் என்பவரின் செல்போன் சேவை, அவர் கோரிக்கை வைக்காமலேயே 2012-ம் ஆண்டு திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து குறித்து அவர் புகார் அளித்தபோது, போலியான குறுஞ்செய்தி என கூறிய ஏர்டெல், புதிய சிம்கார்டு பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ரூ.10000 அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! ஆத்திரத்தில் தீக்குளித்த வாலிபர்!

அந்த எண் முடக்கப்பட்ட நேரத்தில் சென்னை தேனாம்பேட்டை ஐசிஐசிஐ வங்கியில் உள்ள அவரது கணக்கிலிருந்து ரூ.4.89 லட்சம் அவருக்கு தொடர்பில்லாத  நான்கு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து ஐசிஐசிஐ வங்கி மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்த அவர், ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றின் சேவைக் குறைபாடு குறித்து சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஆர்.வி.ஆர்.தீனதயாளன், உறுப்பினர் டி.வினோத்குமார் ஆகியோர் சேவை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை உறுதி செய்வதாக தெரிவித்தனர். அதனடிப்படையில், மனுதாரர் இழந்த தொகை ரூ.4.89 லட்சத்தை 9 சதவீத வட்டியுடனும், மன உளைச்சலுக்கான இழப்பீடாக 2 லட்சம் ரூபாயையும், வழக்கு செலவுத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயையும் மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டுமென ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க | முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.3.44 கோடி அபராதம் வசூல்: காவல்துறை!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News