CM Stalin Postponed Delhi Visit: சென்னை, கிண்டியில்‌ 230 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட,  குடியரசுத்‌ தலைவர் திரௌபதி முர்முவுக்கு‌ அழைப்பு விடுப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் இன்றிரவு (ஏப். 27) செல்வதாக கூறப்பட்டது‌.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரண்டாண்டுக்கு முன் அறிவிப்பு


அதாவது, சென்னை பெருநகரத்தில்‌ உள்ள கிங்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்‌ பன்னோக்கு உயர்‌ சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்‌ என்று ஸ்டாலின் 2021ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று அறிவித்திருந்தார். 


உயர்சிறப்பு பிரிவுகள்


அதன்படி, கிண்டியில் இந்த மருத்துவமனைக்‌ கட்டடம்‌ தரைத்தளம்‌ மற்றும்‌ 6 மேல்‌ தளங்களுடன்‌ சுமார்‌ 51,429 சதுரமீட்டர்‌ பரப்பளவில்‌ கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில்‌ இதயம்‌ மற்றும்‌ நெஞ்சக அறுவை சிகிச்சைத்‌ துறை, மூளை நரம்பியல்‌ அறுவை சிகிச்சைத்‌ துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத்‌ துறை, குடல்‌ மற்றும்‌ இரைப்பை அறுவை சிகிச்சைத்‌ துறை, புற்றுநோய்‌ அறுவை சிகிச்சைத்‌ துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத்‌ துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.


மேலும் படிக்க | ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் கெடுபிடி: அரசின் ஆக்சன் என்ன தெரியுமா?


1000 படுக்கை வசதி


அதிநவீன வசதிகளுடன்‌ கட்டப்பட்டுள்ள கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும்‌ பயனுள்ளதாக அமையும்‌ என்று தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. 


இம்மருத்துவமனையின்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ நிறைவடைந்த நிலையில்‌, முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று இரவு (ஏப். 27) சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச்‌ சென்று, நாளை (ஏப். 28) குடியரசுத்‌ தலைவர்‌ திரெளபதி முர்முவை சந்தித்து, முன்னாள் முதலமைச்சரின் கருணாநிதியின்‌ நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி கிங்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில்‌ 230 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன்‌ கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டது.


ஒன்றரை மணிநேரம் காத்திருப்பு


அந்த வகையில், விழுப்புரத்தில், முதலமைச்சர் கள ஆய்வு திட்டத்தின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி செல்வதற்கு, சென்னை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்தார். இதையடுத்து, அவர் டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் சுமார் ஒன்றரை மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நெக்ஸ்ட் பிளான்?


இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படாததால் அவர் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு, சென்னை விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நாளை (ஏப். 27) காலையில் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ