CM Stalin School Reunion - பால்ய நண்பர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின்
தான் படித்த பள்ளியில் நடந்த ரீயூனியனில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பால்ய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,“நான் படித்த பள்ளிக்கு போகப்போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன். பள்ளிப்பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம். இந்த பள்ளியில் சேர்வதற்கு தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை, இந்த பள்ளியில் நான் படித்தபோது எனது தந்தை கலைஞர் கருணாநிதி, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
பள்ளியில் அமைச்சரின் மகன் என்று நான் காட்டிக்கொள்வதை எனது தந்தை விரும்பமாட்டார். படிக்கும்போது நான் அமைச்சரின் மகனாக நடந்துகொண்டதில்லை. இது என்னுடன் படித்த உங்கள் அனைவருக்கும் தெரியும். அரசு பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன், தற்போதும் பேருந்தில்தான் வரவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
நான் அரசியலுக்கு வருவேன் என்றோ, ஒரு கட்சியின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வருவேன் என்றோ நினைத்துப் பார்த்ததில்லை. நீங்களும் நினைத்திருக்க மாட்டீர்கள்.ஆனால் அது தற்போது நடந்துள்ளது.
முதல்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை மேயர் நான்தான். மேயராக இருந்தபோது இந்த பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.தற்போது முதலமைச்சராக வரவில்லை; முன்னாள் மாணவராகவே வந்துள்ளேன்.
முதலமைச்சராக என்னை உருவாக்கியது இந்த பள்ளிதான்.இப்படி ஒரு உயர்ந்த இடத்திற்கு நான் வந்ததற்கு இந்த பள்ளியும் ஒரு முக்கிய காரணம் என்பதை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். அனைத்தையும் அரசு மட்டுமே வழங்கமுடியாது. அரசு பள்ளிகளில் படித்தவர்கள், முன்னாள் மாணவர்கள் அந்த பள்ளிகளுக்கு முடிந்த உதவிகளை வழங்க வேண்டும். அதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட இருக்கிறது” என்றார்.
மேலும் படிக்க | டிட்கோ தொழிற்பூங்கா... விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி - அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ