Arignar Anna Memomrial: காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவிற்கு CM ஸ்டாலின் மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா வழியில் திமுக வெற்றி நடைபோடும் என சூளுரைத்தார்.
காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா வழியில் திமுக வெற்றி நடைபோடும் என சூளுரைத்தார்.
காஞ்சிபுரத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.
திமுகவின் நிறுவகத் தலைவரான அறிஞர் அண்ணாவின் நினைவிடம் அமைந்துள்ள காஞ்சிபுரத்திற்கு, முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதன் முறையாக சென்றார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சிபுரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
Also Read | AK Rajan NEET குழு நியமனம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறானதா
பேரறிஞர் அண்ணாவின் நினைவில்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு நிறுவப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மன உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்திருந்தாலும், கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக, வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.
இன்று அண்ணாவின் பிறந்த ஊரில் அவரது நினைவில்லத்திற்கு வந்து அவரை வணங்கிய பிறகு, மனதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்தார். இங்கே வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில், 'மக்களிடம் செல்; மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ்; மக்களுக்குப் பணியாற்று' என்ற அண்ணாவின் பிரபலமான அறிவுரையின்படி கழக ஆட்சி வெற்றிநடை போடும் என்பதை தெரிவிக்கும் விதத்தில், அதே அறிவுரையை எழுதியிருக்கிறேன்'' என முதலமைச்சர் தெரிவித்தார்.
ஹூண்டாய் ஆலை தயாரித்த ஒரு கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையையும் அவர் பார்வையிட்டார்.
Also Read | June 30: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR