AK Rajan NEET குழு நியமனம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறானதா?

உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மீது நீட் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 30, 2021, 11:26 AM IST
  • நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது
  • இது திமுகவின் தேர்தல் வாக்குறுதி
  • குழு அமைப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பாஜக சார்பில் மனு தாக்கல்
AK Rajan NEET குழு நியமனம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறானதா? title=

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இருந்தால், நீட் தகுதித்தேர்வு தாக்கத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு செல்லாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தாக்கத்தை ஆய்வு செய்ய ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு மெட்ராஸ் உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மீது நீட் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏ.கே.ராஜன் குழுவை அமைத்த மாநில அரசிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் பதில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

9 பேர் கொண்ட ஏ.கே.ராஜன் குழு அரசியலமைப்பிற்கு விரோதமானது, சட்டவிரோதமானது, நியாயமற்றது என்று, பாஜக மாநில பொதுச் செயலாளர் (BJP State General Secretary) கரு நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீட் குழு செயல்படுவதை தடுக்க வேண்டும் என்றும் நாகராஜன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

Also Read | NEET தாக்கம் குறித்து 86342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்: ஏ.கே. ராஜன் குழு

2017 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மருத்துவ நுழைவுக்கான நீட் தேர்வை அமல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை விசாரித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியை கோரியதா அல்லது பெற்றுள்ளதா என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியது, ஏனெனில் இதுபோன்ற ஒரு குழுவை அமைப்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது.

மாநில அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், குழு அமைத்தல் என்பது அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என்று தெரிவித்தார். இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, மக்களின் கோரிக்கையும் ஆகும் என்று அவர் கூறினார். 

ALSO READ: தமிழகத்தில் நடக்குமா நீட் தேர்வு? நீட் தாக்கம் குறித்த ஆய்வுக்குழுவில் உறுப்பினர்கள் நியமனம்

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய நீதிமன்ற அமர்வு, “அப்படி இருக்கலாம், ஆனால் அது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என்றால் அதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தது. 

திமுக ஆட்சிக்கு வாக்களித்தால் நீட் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்படும் என்று ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. நீட் தேர்வை ஒழிக்க மாநில சட்டசபையில் ஒரு சட்டம் இயற்றப்படும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 5 ஆம் தேதியன்று நடைபெறும்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட  ஆய்வுக்குழுவின் மூன்றாவது கூட்டம் சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

ALSO READ: NEET Impact: 'ஒரே தேர்வு முறை சமூக நீதிக்கு எதிரானது'- நடிகர் சூர்யா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News