கோவை மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை வீடுகளில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 15 பேரின்  குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு கீழே இருந்த வீடுகள் மீது விழுந்தன. இதில் 4 வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தன. 


இந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்துக்கு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர், தாசில்தார், கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்துள்ளனர்.


 



 



இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் மழையால் வீடுகள் இடிந்து உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.