2 லட்சம் வட்டிக்கு கொடுத்துவிட்டு 2 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த போலீஸ் - கோவை விவசாயி புகார்
கோவையில் பணியாற்றும் காவலர் ஒருவர் வட்டிக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக விவசாயி ஒருவர், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பூராண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். விவசாயியான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு விவசாய இடுபொருட்கள் வாங்குவதற்காக கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் தலைமை காவலரான லோகநாதன் என்பவரை அணுகி இரண்டு ரூபாய் வட்டிக்கு இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். கடன் தொகைக்கு ஒப்பாக விவசாயி கோபாலின் ஒரு ஏக்கர் நிலத்தை அடகு வைக்க வேண்டும் என்று தலைமை காவலர் கேட்டுக் கொண்டதை அடுத்து தற்காலிக கிரைய பத்திரம் மூலம் தனது நிலத்தை தலைமை காவலருக்கு எழுதிக் கொடுத்துள்ளார் விவசாயி கோபால்.
மேலும் படிக்க | மதுரையில் ஆர்பி உதயக்குமார் கைது - பின்னணி இதுதான்
அதே வேளையில் வாங்கிய பணத்திற்கு அவர் வட்டியை செலுத்திக் கொண்டிருந்த போதும் விவசாயி கொடுத்த கிரைய பத்திரத்தை பயன்படுத்தி தலைமை காவலர் லோகநாதன் ஒரு ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி பத்திரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி கோபால் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத சூழலில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே தலைமை காவலர் அந்த நிலத்தை முழுமையாக கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதை அடுத்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.எஸ். சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வந்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் விவசாயி கோபால் புகார் மனு அளித்தார்.
அப்போது பேசிய அவர், தலைமை காவலர் லோகநாதன் தற்போது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அபகரித்துக் கொண்ட தனது நிலத்தை மீட்டு தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ள நிலையில் அவர்களது தற்போதைய பதிலில் நம்பிக்கை இல்லை எனவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | திருமணம் ஆன 2 ஆண்டுகளில் நடந்த கொடூரம்! குழந்தையுடன் பெண் மரணம் - பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ