அசந்த நேரத்தில் 2 சவரன் தங்கச் செயினை திருடிய டிப்டாப் ஆசாமி - சிசிடிவி வீடியோ !
அசந்த நேரத்தில் 2 சவரன் தங்கச் செயினை திருடிய டிப்டாப் ஆசாமி - சிசிடிவி வீடியோ !
கோவை அன்னூரில் ஜெயக்குமார் என்பவர், சொந்தமாக நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டிப்டாப்பாக வந்த ஆசாமி ஒருவர், கடை ஊழியர்களிடம் தன்னை ஒரு பேங்க் மேனேஜர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார். பின்னர். கடையில் இருக்கும் நகை டிசைன்களை காட்டுமாறு கூறியுள்ளார். அப்போது வெவ்வேறு டிசைன்களை காட்டி, அதை எடுக்குமாறு சொல்லிவிட்டு, கடை ஊழியர் அசந்த நேரத்தில், 2 சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாக திருடினார். எடுத்த வேகத்தில் அங்கிருந்து வேகமாக ஓடி தப்பித்தார்.
இந்த நிலையில், டிப் டாப் ஆசாமி அங்கிருந்து மாயமானதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் வெளியே ஓடிவந்து பார்த்துள்ளார். பின்னர், கடையில் இருந்த 2 சவரன் தங்க செயின் காணாமல் போனது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அன்னூர் போலீசார் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு மேற்கொண்டனர். அதில், தங்கச் செயினை திருடிச் சென்ற மர்ம ஆசாமியின் முகம் தெளிவாக பதிவாகியிருந்தது.
மேலும் படிக்க | மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் என்ன ‘டம்மிகளா’?!
இதனை அடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அன்னூர் போலீசார், தப்பியோடிய மர்ம நபரை தேடி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அன்னூர் வட்டாரப் பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது, பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | சென்னை: பள்ளி மாணவியை கடத்த முயற்சி, கீழே குதித்து தப்பித்த மாணவி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ