Coimbatore Lawyer Murder News Update : கோவை செட்டிபாளையம் அருகே நேற்றைய தினம் நான்கு பேர் கொண்ட கும்பலால் வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொலை வழக்கில் 8 தனிப்படை போலீசார் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தபட்டதில் 12 மணி நேரத்தில் 4 பேரை கைது செய்துள்ளோம் என கூறினார். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் நான்கு பேரும் கோவையை சேர்ந்தவர்கள் என்றும், பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொலை நடந்திருப்பதாக தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஓப்பன் சேலஞ்ச் விடுகிறேன்! முடிந்தால் சொல்லி பாருங்கள் - எச் ராஜா!


இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் அய்யனார் என்ற செல்வம் மற்றும் கௌதம் ஆகியோர் வழக்கறிஞர் உதயகுமாருடன் காரில் சென்றுள்ளனர். அப்போது வழக்கறிஞர் உதயகுமாருக்கு கொடுத்த 30 லட்சம் பணத்தை அய்யனார் என்ற செல்வம் திருப்பி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே செட்டிபாளையம் அருகே காரை நிறுத்தி அய்யனாரின் நண்பர்களான அருண்குமார் மற்றும் அபிஷேக் ஆகிய இரண்டு பேரை வரவழைத்து, அவர்களையும் காரில் ஏற்றி சென்றுள்ளனர். 


அப்போது, அய்யனார், கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் அறிவாளால் வழக்கறிஞர் உதயகுமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் கார், இரு சக்கர வாகனம் ,அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மட்டுமே இந்த கொலைக்கான காரணம் என்றும் எஸ்பி பத்ரி நாராயணன் தெரிவித்தார். மேலும், இந்த வருடம் கொலை வழக்கு குறைந்துள்ளது. சோஷியல் மீடியாவை கண்காணிக்க  தனி குழுக்கள் உள்ளது. கல்லூரிகளில் மாணவர்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறிய காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை  செய்பவர்களை கைது செய்து வருகிறோம் என்றும் கூறினார்.


இந்த கொலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இந்த கொலையும் ஒரு சாட்சியாக அமைந்திருப்பதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அன்றாடம் நடைபெறும் கொலைகளை தடுக்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரலாற்றில் கையாளாகாத முதலமைச்சர் என்றே அழைக்கப்படுவார் என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


மேலும் படிக்க | ராமர் இருந்ததாக எந்த வரலாறும் இல்லை - அமைச்சர் சிவசங்கர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r