கோவை மாநகர் R சின்னசாமி அதிமுக-வில் இருந்து அதிரடி நீக்கம்!
அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் R சின்னசாமி அவர்கள் அதிமுக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது!
அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர் R சின்னசாமி அவர்கள் அதிமுக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது!
அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளர், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்ந்தவர் கோவை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த R சின்னசாமி. கழகத்தின் கொள்கைக்கு முரணாக நடந்துக்கொண்டதாக இவர் கழகத்தின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறிது அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கோவை மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. R. சின்னசாமி, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.