மீண்டும் சவுக்கு ஷங்கர் மீது வழக்கு பதிவு! இந்த முறை என்ன வழக்கு தெரியுமா?
YouTuber Savukku Shankar: இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெண் போலீசார் குறித்து யூடியூப் தளத்தில் அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது. மேலும், அவரை நேர்காணல் செய்த பெலிக்ஸ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரையும் கைது செய்தனர். தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம்
இதனிடையே கோவையில் சிறையில் சவுக்கு சங்கரின் கை உடைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், யூடியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவினரிடைய கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் செய்த வழக்கு விசாரணைக்காக திருச்சி அழைத்துச் செல்லப்படுகிறார்.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சவுக்கு ஷங்கரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்றைய தினம் அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் கஸ்டடி வழங்கி அனுமதி அளித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலையுடன் கஸ்டடி முடிந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலிசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும் தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் படிக்க | கோவையில் பொதுமக்களை ஈர்த்த பஞ்சாபி உணவுத் திருவிழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ