11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம்

TN Board Class 11th Result 2024: தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரிசல்ட் இன்று காலை வெளியானது. இதில் மொத்தம் 91.17% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 14, 2024, 11:22 AM IST
  • 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
  • பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in இல் சரிப்பார்க்கலாம்.
  • ஆண்டு வாரியாக தேர்ச்சி விகித விவரம்.
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம் title=

TN HSE(+1) Results 2024: தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு 2024 ஆம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (TN HSE(+1) Results Declared), கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், தற்போது இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது.

அண்மையில் 10 ஆம் மற்றும் 12 ஆம் தேதி வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது இன்று காலை 9.30 மணிக்கு தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (TN 11th Result) இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகளை எப்படி சரிப்பார்ப்பது?
தேர்வு எழுதியவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்:

மேலும் படிக்க | Udumalaipettai Gang Rape Case: 2 சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது - பதறவைக்கும் சம்பவம்

இந்த நிலையில் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

>tnresults.nic.in இணையதளத்தை தேடவும்
>11ஆம் Exam Results May 2024 என்பதை அழுத்தவும்.
>உள் நுழைவதற்கான log in லிங்க் திறக்கும்.
>உங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி-வருடத்தை குறிப்பிட வேண்டும்.
>உங்களது தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும், இதை ஸ்கிரீன் ஷாட் அல்லது டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வாரியாக தேர்ச்சி விகிதம் | TN 11th +1 results 2024: Pass Percentage Over the Years:
இந்நிலையில் இந்த ஆண்டு இந்த பிளஸ் 1 தேர்வில் 91.17% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு, பிளஸ் பிளஸ் 1 தேர்வில், 7,76,844 மாணவர்களில், 7,06,413 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், அதன் படி 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை விட மாணவிகள் 94.36 சதவீத தேர்ச்சி அடைந்தனர், மறுபுறம் மாணவர்கள் 86.99 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர். அதன்படி அறிவியலில் 93.38 சதவீத தேர்ச்சி விகிதமும், வணிகத்தில் 88.08 சதவீதமும், கலைப் பிரிவில் 73.59 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.

அதேசமயம் 2022 ஆம் ஆண்டில், தேர்வெழுதிய 8,43,675 மாணவர்களில் 7,50,856 பேர் தேர்ச்சி பெற்றனர், இது ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதமாக 90.07% ஆக இருந்தது. இதற்கிடையில், 2021 ஆம் ஆண்டில் 2,700 க்கும் மேற்பட்ட பள்ளிகள் பிளஸ் 1 தேர்வில் 100 சதவீத முடிவுகளை பெற்றனர்.

மறுபுறம் 2020 ஆம் ஆண்டில், மொத்தம் 8,15,442 மாணவர்கள் தேர்வெழுதினர், அதில் 7,83,160 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 96.04 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Congress Jayakumar Death: ஜெயக்குமார் மரண வழக்கு: தேவைப்பட்டால் அப்பாவுவை விசாரிப்போம் - ஐஜி கொடுத்த அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News