முன்விரோதத்தில் சலூன் கடை உரிமையாளர் வெட்டி கொலை!
கோவை மாவட்டத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் சலூர் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் செல்வபுரம் தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் சசிகுமாரின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் அவரை வெளியே வரச்சொல்லி அழைத்துள்ளனர். அப்போது வெளியே வந்த சசிகுமாரை, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இதில், சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சசிகுமாரைக் காப்பாற்றுவதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் போலீசார், சசிகுமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொலை தொடர்பாக செல்வபுரத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கலில் சசிகுமாருக்கும், ராம்ஜி மற்றும் இளங்கோவனுக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது.
மேலும் படிக்க | கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை எரித்து கொன்ற மகள்..!
பிரச்சினை பெரிதாகவே ஆத்திரமடைந்த இருவரும் திட்டமிட்டு சசிகுமாரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடு இரவில் நடந்த பயங்கர் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் படிக்க | மனைவியுடன் தகாத உறவில் இருந்த வாலிபரைக் கொன்று வீசிய கணவன்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR