கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 12ம்  வகுப்பு படிக்கும் பொன் தாரணி எனும் மாணவி கடந்த வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மாணவிக்கு சின்ம்யா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்பட்ட நிலையில். அவர் மீது போக்சோ உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இன்று இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் பள்ளி நிவாகத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று கோவையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டம்!


இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். நாம்தமிழர் கட்சித்தலைவர் சீமான், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் ஏற்கனவே இரு முறை அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் என கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்ட சசிகலா மீண்டும் கோவையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட பொன் தாரணி தற்கொலை செய்ய காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் என கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், கோவை உக்கடத்தை சேர்க்க 17 வயது பள்ளி மாணவி, தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் தொல்வைக்கு ஆளாக்கப்பட்டு பயம் காரணமாக மனவேதனையடைந்து, தற்கொலை செய்து, தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும், காவல்துறை நேர்மையாக விசாரித்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல்வி கூடங்களில் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறது.



இதை சரியாக கடைபிடிக்காமல் போனால் மாணவ மாணவியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். கல்வி கூடங்கள் மட்டுமல்ல பெண்கள் வேலை பார்க்கும் அலுவலகமோ அல்லது எந்த இடமாக இருந்தாலும் இது போன்று பொறுப்பற்று பெண்களை அச்சுறுத்தி, அவர்கள் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் ஆட்கள் இருந்தால் சம்டந்தப்பட்ட நிர்வாகத்தினரோ உடன் இருப்பவர்களோ அவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற தற்கொலைகள் நிகழாமல் தடுக்க முடியும். நம்மாணவச்செல்வங்கள், குறிப்பாக மாணவிகள் மற்றும் பெண்ணாக பிறந்த அனைவரும் மிகுந்த தன்னம்பிக்கையோடு, தைரியமாக எத்தகைய சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வாழவேண்டும்.  அப்போதுதான் எந்த சவால்களையும் முறியடித்து எதிலும் வெற்றி வாகை சூட முடியும் என்று உங்களை
அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  இது போன்று தவறு இழைக்கும் கல்வி நிறுவனங்களை, தமிழக அரசு கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ALSO READ மாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை வேண்டும் - சீமான்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR