Coimbatore Double Decker Bus free ticket | டபுள் டக்கர் பஸ் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ல வேண்டும் என ஆர்வம் இருக்கும். இந்த பஸ் 1920 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு நகரங்களில் இந்த டபுள் டக்கர் பஸ் இயக்கப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் அதிக பாலங்கள் கட்டப்பட்டதினால் 2008 ஆம் ஆண்டு முதல் இந்த டபுள் டக்கர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் பொதுமக்களை மகிழ்விக்கும் விதமாக டபுள் டக்கர் பேருந்தை கோயம்புத்தூர் விழாவில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு 17 வது பதிப்பாக துவங்கியுள்ள கோவை விழாவில் இரண்டு டபுள் டக்கர் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.  இதுகுறித்து கோயம்புத்தூர் விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், கோயம்புத்தூர் நகரத்தின் பெருமைகளை கொண்டாடும் விதமாக கோயம்புத்தூர் விழா அமைப்பாளர்கள் சார்பில் டபுள் டக்கர் பேருந்து மூலம் கோவை நகரத்தை சுற்றி பார்க்க இந்த பேருந்தை கொண்டு வந்துள்ளோம்.


மேலும் படிக்க | கார்த்திகை மாத பலன்கள்: “வேசி யோகம்” மொத்த கிரகங்களின் பார்வையும் இந்த ராசி மீது..


நவம்பர் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கென்ன உருவாக்கப்பட்ட பிரத்தேக மொபைல் செயலி மூலம் பயணத்தை முன்பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த டபுள் டக்கர் பஸ் வ.உ.சி பூங்காவில் இருந்து முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேரும் என தெரிவித்தனர். கோவையில் டபுள் டக்கர் பஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ நகரங்களில் மட்டுமே இயங்கி வந்த டபுள் டக்கர் பஸ் கோவையிலும் இயக்கப்பட உள்ளது. இது பேருந்து பயணிகளுக்கு புதுவிதமான பயண அனுபவத்தையும் கொடுக்கும். 


கோவை டபுள் டக்கர் பேருந்து இலவச டிக்கெட் பெறுவது எப்படி?


www.coimbatorevizha.theticket9.com-ல் இந்த பேருந்தில் பயணிக்க விரும்புபவர்கள் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.7010708031 என்ற மொபைல் எண்ணுக்கு அழைத்தும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் கட்டணம் கிடையாது. இவலசமாக கோயம்புத்தூர் நகரின் அழகை சுற்றி பார்த்து ரசிக்கலாம். 


மேலும் படிக்க | குடிமகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் கடைகளில் ஜிபே, போன் பே நாளை முதல் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ