தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
அதிக நேரம் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர், சுனிதா ஸ்ரீ. இவருக்கு 20 வயதாகின்றது. சுனிதா, பிராட்வேயில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கிரிமினாலஜி படித்து வருகிறார்,
இந்நிலையில் கல்லூரி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுனிதா ஸ்ரீ செல்போன் அதிகமாக பார்த்துக் கொண்டிருப்பதால் தாய் ஷீலா கண்டித்துள்ளார்.
பின்னர் உணவு வாங்க கடைக்குச் சென்ற தாய் ஷீலா வீட்டிற்கு திரும்பி வந்த பொழுது வீட்டின் படுக்கை அறையில் மகள் சுனிதா ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கியபடி இருந்ததை பார்த்த தாய் அழுதவாறு கதறி சத்தமிட்டுள்ளார்.
மேலும் படிக்க | விஜய்க்கு பின்னால் இருக்கும் அந்த அரசியல் புள்ளி யார்? ரகசியம்
கல்லூரி மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த பொழுது பரிசோதனை செய்த மருத்துவர் சுனிதா ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்,
செல்போன் மீது உள்ள ஆர்வத்தினால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புது வண்ணாரப்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது,
மேலும் படிக்க | அரசியலை விட்டு விலகும் இந்து மதக் கட்சி தலைவர் ஜெயம் SK கோபி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ