சென்னை: மாணவிகளின் தற்கொலைப் படலங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், ராஜலிங்கபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி பாப்பா. நெல்லை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டப்படிப்பிற்கு சேர்ந்துள்ளார். இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை அவரது தந்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாக செலுத்தினார். அவர் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருந்த போதிலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது. தனது படிப்பு செலவுக்காக பெற்றோர் மிகுந்த சிரமப்பட்டு பணம் செலுத்தியதை எண்ணி பாப்பா மன வேதனை அடைந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  


நேற்று மாலை முத்துக்குமார் தனது மனைவியுடன் களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு கதவை உள்புறமாக பூட்டிக் கொண்ட 18 வயது பாப்பா, துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மேலும் படிக்க | சிவகாசியில் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை


மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த முத்துக்குமாரும், அவரது மனைவியும் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 


கடிதம் சிக்கியது
இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.


மேலும் படிக்க | தமிழகத்தில் தொடரும் தற்கொலைகள்; திருவள்ளூரில் பிளஸ் 2 மாணவி தற்கொலை


மேலும் பாப்பாவின் கைப்பையை சோதனையிட்ட போது அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதம் சிக்கியது. அதில் அவர் தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக  எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 12ம் வகுப்பு மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை முடிந்தது. சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று காரைக்குடி டிஎஸ்பி வினோஜ் தெரிவித்தார்.


மேலும் படிக்க | Student Death: விருத்தாசலத்தில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை


மேலும் படிக்க | ஆசிரியர்களுக்கு செக் வைத்த பள்ளி கல்வித்துறை! புதிய அதிரடி திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ