கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கண்ணார் பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இளைஞர்கள் பலர் சுற்றி திரிந்திருக்கிறார்கள். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காரமடை போலீசாருக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டவுடன் இளைஞர்கள் தப்பி ஓடிய முயற்சித்தனர். சுதாரித்துகொண்ட போலீசார் இளைஞர்களை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் பிடிபட்ட இளைஞர்கள் காரமடையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும், அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


முத்து குமார்,செபஸ்டீன் ராஜா, பிரவீன், சரத்குமார், அகிலேஷ், தவ்பிக் மற்றும் பிரதீப் ஆகிய ஏழு பேரும் கூட்டாக சேர்ந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டது தெரியவந்தது. கஞ்சா போதை ஏற்றிக்கொண்டவர்கள் கண்ணார் பாளையம், ரங்கா நகர் பகுதியில் நல்ல வசதியான வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். போலீசார் சரியான நேரத்தில் கூண்டோடு அவர்களை தூக்கியதால் பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அது நடக்காமல் இருந்திருந்தால் திட்டமிட்டப்படி வீடுகளுக்குள் புகுந்து கைவரிசையை காட்டியிருப்பார்கள். 



மேலும் படிக்க | துபாயிலிருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்த இளைஞர்- லாட்ஜில் அடைத்து வைத்து கொடுமை..!


திருட்டின் போது யாராவது தடுக்க முயன்றால் அவர்களை தாக்குவதற்காக கத்தி, உருட்டுகட்டை என அனைத்தையும் கச்சிதமாக திட்டமிட்டு நகர்த்தியிருக்கிறார்கள். கடைசியில் அவர்கள் புகைத்த கஞ்சாவே அவர்களை காட்டி கொடுத்துவிட்டது. இந்நிலையில் ஏழு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். 



கஞ்சா போதையில் சுற்றி திரிந்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் கோவை காரமடை பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது. 


மேலும் படிக்க | போதை வெறியில் பெற்ற தாயை கொலை செய்த மகன் - இதுதான் காரணம்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR