வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கமலஹாசன் வலியுறுத்தல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி 26 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 


இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து இரண்டரைக் கோடி ரூபாய் பிடிபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் அண்ணணிடம் இருந்து தம்பி கற்றுக் கொள்வதுதான் வழக்கம் என்று விமர்சித்துள்ளார்.


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மய்யத்தில் உள்ளவர்களும் தேர்தலில் செலவு செய்ய வேண்டும் என்று கூறுவதாகவும், அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்ட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.


மேலும், ரஜினிகாந்த் பிரச்சாரத்திற்கு வந்தால் மகிழ்ச்சி என்றும் கமல் தெரிவித்தார். ஆனால் மீண்டும் மீண்டும் அவரிடம் பிரச்சாரத்திற்கு வருமாறு கோர முடியாது என்று அவர் கூறினார்.


தொற்றுநோய் போல பரவியுள்ள பணம் கொடுக்கும் வழக்கத்தை தடுக்க வேண்டியது நமது கடமை. வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் கமல் வலியுறுத்தினார். திராவிடம் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்றும் அனைவரும் திராவிடர்கள் தான் என்றும் கமலஹாசன் கூறினார்.