பத்தல பத்தல பாடல் புண்படுத்திவிட்டது; காவல் ஆணையரிடம் புகார்
விக்ரம் படத்தின் சிங்கிள் பாடல் குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கமல் ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வருகிற மே 15ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல் ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள ‘பத்தல பத்தல’ என்று தொடங்கும் பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று வெளியானது.
இப்பாடலில் இடம்பெற்ற, ‘கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே.. ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே. சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே’ போன்ற வரிகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பத்தல பத்தல பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார்.மேலும் படிக்க | விக்ரமிற்கு முன்பே கமல் படத்தில் நடித்துள்ள சூர்யா!
அந்தப் புகார் மனுவில்,“மத்திய அரசை கிண்டல் செய்யும் வகையிலும், சாதி ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.
இந்த சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்கி, பாடலை எழுதிய மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமலஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் விக்ரம் படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | விக்ரம் படத்தில் சூர்யா கேரக்டர் குறித்து லீக்கான தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR