திருப்பூர்: பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் தங்கள் ஓட்டை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு (TN Assembly Polls 2021) தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலை 11 மணி வரை 26,29 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் திருப்பூர் அருகே வாக்குசாவடியில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் அதிமுகவுக்கு ஓட்டு செல்வதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து திருப்பூரில் வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத்தப்பட்டது. அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அதிகாரிகள் வாக்கு இயந்திரத்தை சோதனை செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்தில் லைட் எரிவதாகப் புகார்:


வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதிகாரிகள் சோதனை செய்ததில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்கிறது என்றும், வழக்கம் போல் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் திருப்பூர் ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம்


ALSO READ | TN Assembly Election 2021 LIVE Updates: தமிழகம் சட்டமன்றத் தேர்தல் நிலவரம்


இன்று ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடக்கின்றன.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR