சென்னை: சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவையில் மறைந்த எழுத்தாளர் விஷ்வகோஷ் (எ) ராஜேந்திர சோழனின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் ,நடிகரும் இயக்குனருமான தங்கர்பச்சன் ,விசிக தலைவர்  திருமாவளவன் , தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எழுத்தாளர் பவா சொல்லதுறை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமாவளவன் பேச்சு


இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், மாக்சிய சிந்தையாளராய் அவரிடம் அறிமுகம் ஆனேன்,எளிமையான தோற்றம் கொண்டவிஷ்வகோஷ் அப்போது, மன்மொழி என்ற புத்தகத்தை எனக்கு அளித்தார், மண்ணும் மொழியும் தவிர்க்க முடியாத அடையாளம் ஆக  இந்த சமூகத்தில் இருக்கிறது, நம் அடையாளம் மண்,மொழி ஆகியவை தான், ஐயாவின் நூல்களை அரசு உடமை ஆகவேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்கள்,அதனை நான் வரவேற்கிறேன், நிச்சயமாக இதன் வேலையை நானும் , சகோதரர் வேல்முருகன் நிச்சயமாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சொல்வோம் என்று தெரிவித்தார்.


மகத்தான ஆளுமை கொண்ட விஷ்வகோஷ் ஐயாவை சந்திக்க பலமுறை காத்திருந்தேன், ஆனால் சந்திக்காமல் போய்விட்டது, அவர் இப்போது இங்கு இருப்பதாக நினைத்து கூறுகிறேன் 2009 ஆண்டு உண்ணாவிரதம் இருந்தேன்,  அப்போது பிரபாகரனை சிங்கள படையினர் சூழ்ந்திருந்த நேரம் அது. அவர் அப்போது கைது செய்யப்படலாம், அல்லது பிணமாக இருக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.


தகவல் அறிந்து தலைவர்களை சந்தித்தேன்,  ஐயா ராமதாஸ் அவர்களை சந்தித்து பேசினேன், திராவிட கழகம் ஆசிரியர் வீரமணியிடம் இதை சொல்லலாம் என மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறினார்,அப்போது அவர் முதலமைச்சரிடம் இதனை பேசுவார் என்று கூறினார்கள். நான்,மருத்துவர் ராமதாஸ், வீரமணி முவரும் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அவர்களை சந்தித்து பேசினோம், மருத்துவர் ராமதாஸ் அப்போது பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


ஜனவரி 12 தேதி நடக்க இருந்த கூட்டம் அப்போது ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வந்தது, பாமக ,விசிக இரண்டு கட்சிகள் மட்டும் களத்தில் இருந்தோம் ,இதில் இருவர் மட்டும் போராட்டத்தில் இருக்கலாம் என்று கூறினேன். பிறகு மருத்துவர் போன் செய்து தம்பி இது சரியாக வராது , நீங்கள் கலைஞரிடம் பேசுங்கள் என்று கூறினார்.


மேலும் படிக்க | பாஜகவில் இணைந்த ஓய்வு பெற்ற காவல் துறையினர்... காஞ்சீபுரத்தில் நடந்த நிகழ்ச்சி!


பிறகு நான் இரவு நேரத்தில் தாம்பரம் தாண்டி செல்லும் போது ஒரு இடத்தில் உண்ணாவிரதம் நடத்த திட்டம் இட்டேன், இந்திய அரசே போரை நிறுத்து என்ற கோரிக்கை தான், இரண்டு நாள் தண்ணீர் கூட அருந்த வில்லை, மருத்துவர் நேரில் வந்து தண்ணீர் மட்டும் அறிந்து என்று கூறினார், பிறகு தண்ணீர் அருந்தினேன்.


திருமா திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக உடன் கை கோர்க்கிறார் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். பிறகு மீண்டும் மருத்துவர் என்னை சந்தித்தார், ஒரு தந்தையைப் போன்று அவர் கூறியதை ஏற்று போராட்டத்தை முடித்துக் கொண்டேன். அந்த அளவுக்கு மருத்துவர் அப்போது எனக்கு  நெருக்கமாக இணக்கமாக இருந்தார்,ஒரு உடன் பிறந்த சகோதரர் போன்று என்னை பார்த்தார், அப்போது அவர் பேச்சைக் கேட்டு தான் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.


மருத்துவர்  அப்போது ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தினார்,என்னை அழைக்க வில்லை, இருப்பினும் நான் அதில் கலந்து கொண்டேன், மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் அன்று கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் போராட்டத்தை நிறுத்தினேன், நான்கு நாட்களுக்கு இந்த போராட்டம் நடைபெற்றது.


நான்கு நாள் போராட்டத்தில் 26 பேர் குண்டர் பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். மூன்று பேர் தீக்குளித்தார்கள், அப்போது மருத்துவர் ராமதாஸ் போன்றோர்கள் நீங்கள் திமுக கூட்டணி இருந்து வெளியே வாருங்கள், அதிமுகவில் இணையலாம் என்று கூறினார்கள் , தனியே நிற்கலாம் என்றால் கூட சரி ஆனால் அதிமுக ஒரு கூட்டணி எப்படி என்று கேட்டேன்.


ஈழத் தமிழரின் பிரச்சினையை கிடப்பில் போட்டது அதிமுக அப்போது, ராஜீவ் காந்தி இறப்பிற்கு பிறகு சோனியா காந்தியை விட மிக துயரத்துக்கு ஆளானவர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், சட்டமன்றத்தில் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று பேசியபோது நானும் வெளிநடப்பு செய்தேன், பாமகவும் வெளிநடப்பு செய்தது, இவ்வாறு இருக்கும் போது அதிமுக எப்படி ஒரு மாற்றாக இருக்கும் என நான் அதிலிருந்து வெளியேறினேன்.


அதிமுக புலிகளை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை, 91க்கு பிறகு ஈழத்தை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை, ஒரு அறிக்கையும் விட்டதில்லை ஆதரவாக பேசியதும் இல்லை, புலிகள் அழிக்கப்படும் வரை அமைதி காத்த இயக்கம் அதிமுக என்பதை மறந்துவிட முடியாது.


ஒரு கோடி உறுப்பினரை கொண்ட கட்சி அப்படியே அமைதி காத்தது, அப்படிப்பட்ட கட்சியுடன் சேர்வதில் ஒரு தயக்கம் இருந்தது, அப்போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது, விமர்சனங்களையும் மறுக்கவும் இல்லை அதனை தவறு என்று சொல்லவும் இல்லை


தோழர் ராஜேந்திர சோழன் அவர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையும் அதில் துணிகிறது, திருமா இது தகுமா உன் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை, உன்னை இமயம் போல நாங்கள் கருதினோம் உன் போராட்டம் நீடித்திருக்க வேண்டாமா, என்று அவர் வருந்தி இருக்கிறார், உரிமையோடு இதனை அவர் கூறியிருக்கிறார், அவர் மீது ஒரு மிகப்பெரிய மரியாதை எனக்கு உண்டு.


மேலும் படிக்க | மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... மூன்று நாள் சுற்றுப்பயணம்!


தோழர் ராஜேந்திர சோழன் அவர்கள் என் மீது வைத்த விமர்சனம், அவருக்கு நான் தரவேண்டிய விளக்கம் என்ற ஒரு உந்துதலை ஏற்படுத்தியது, அவரைப் பார்க்க வேண்டும் அவருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, அவரிடத்திலே என்னுடைய நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன், அவர் தற்போது உயிரோடு இருப்பதாகவே எண்ணிக்கொண்டு இந்த விளக்கத்தை நான் தருகிறேன், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை,


மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் அன்று அளித்த நம்பிக்கையில், நான் போராட்டத்தை நான்காவது நாட்களில் நிறுத்த வேண்டியது தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை, உங்களை நினைத்து தலை வணங்குகிறோம் என்று திருமாவளவன் பேசினார்.


தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு


"தமிழகத்தில் நேற்று ஒரு கதாநாயகன்(விஜய்) கட்சி ஆரம்பித்து அதில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக ஊடகத்தில் செய்தி வருகின்றது; இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து வரும் எண்ணற்ற தியாகிகளை இளைய சமூகம் தூக்கி எறிந்து விட்டு கூத்தாடிகளை கொண்டாடிவரும் நிலை உடைக்கப்பட வேண்டும் என்று நிகழ்ச்சி மேடையில் பேசிய வேல்முருகன் தெரிவித்தார்.


விஜய் தொலைக்காட்சி, எழுத்தாளர் பவா செல்லதுரை பற்றி ஒரு நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்தி விட்டதை கண்டித்து தொலைக்காட்சியை அடித்து நொறுக்குவேன் என்று அறிவித்தேன். சமூகத்தின் படைப்பாளி, எழுத்தாளர் என்ற ஆகச்சிறந்தவனை கூத்தாடி கும்பல் அசிங்கப்படுத்தி விட்டதே என்ற கோபம்தான் விஜய் தொலைக்காட்சியை அடித்து நொறுக்குவேன் என அறிவித்தேன் 


தமிழ் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் கூட்டணியில் இருந்தாலும் கண்டித்து பேசுவேன் என்னை பொறுத்தவரை கூட்டணி, கட்சி, தேர்தல், உடன்படிக்கை ஆகியவை அதற்கப்பால் தான் 


தமிழகத்தில் ஒரு கதாநாயகன் நேற்று ஒரு கட்சியை ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கையை இணையதளத்தில் வெளியிட்டார் அவருக்கு 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள் என செய்திகள் வருவதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


40 ஆண்டு காலமாக பொது வாழவை அர்ப்பணித்து நானும் அண்ணன் திருமாவளவன் போன்ற ஆளுமைகள் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உழைத்து வருகிறோம். எண்ணற்ற தியாகிகளை இளைய சமூகம் தூக்கி எறிந்து விட்டு கூத்தாடிகளை தூக்கி கொண்டாடும் நிலை உடைக்கப்பட வேண்டும் என்று கூறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், நான் பேசிவிட்டு  வெளியில் சென்றாள்  விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். 


மேலும் படிக்க | ஜாபர் சாதிக் விவகாரம்: களத்தில் இறங்கியது அமலாக்கத்துறை - சிக்கப்போவது யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ