கடந்த மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமது அணிக்கு வாக்கு சேகரிக்க தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசி வந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைச்சர் ஆனந்தன் என்பவர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


ஆனால் அந்தக் கூட்டத்தில் தான் அவதூறாக எதுவும் பேசவில்லை எனவும், புகாரில் தெரிவிக்கப்பட்டது போல எந்த நிகழ்வும் அங்கு நடைபெறவில்லை என்றார். மேலும் எனக்கும்,  தே.மு.தி.க.வுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் என் மீது வழக்கு தொடரப்பட்டது. எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார் பிரேமலதா.


இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அவர்கள் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் 2 வாரத்துக்கு பிரேமலதா தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.