மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இன்றைக்கு வெளி வந்திருக்கிறது. அந்த இரண்டு மாநிலங்களில் குறிப்பாக ஏற்கெனவே குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த இமாச்சல் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற நிலையில் வெற்றி பெற்றிருக்கும் அந்த இரண்டு மாநிலங்களைப் பொறுத்தவரையில் பாஜகவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆனால், அதே நேரத்தில் நாட்டின் பன்முகத் தன்மையைப் பாதுகாக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை இந்தத் தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டியிருக்கிறது. என்றார்.


மேலும் அவர், மதுசூதனன் இனி தேர்தலில் நிற்கக் கூடாது என்ற ஒரு நிலையை நிச்சயமாக தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.