திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி - கே.எஸ்.அழகிரி கூறிய விளக்கம்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களே ஒதுக்குவதாக அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி அதிருப்தி தெரிவித்துள்ளார்
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதனால், கனிசமான இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைத்தாலும், குறைவான சீட்டுகளை திமுக தலைமை ஒதுக்குவதாக அக்கட்சி நினைக்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களின்போது பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கையும், தொகுதி விவரங்களும் வெளியானது. இந்நிலையில், மீண்டும் ஒருமுறை அந்த அதிருப்தியை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி வெளிப்படுத்தியுள்ளார்.
ALSO READ வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு - அதிகாரிகளுக்கு உத்தரவு
வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்பவாதம் எனக் குற்றம்சாட்டினார். வட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் சந்தித்த தோல்வியினால், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியிருப்பதாகவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், " திமுக கூட்டணியில் குறைந்த இடங்களே ஒதுக்குகிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம். இதற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும்" எனக் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது ஒரு சில கோரிக்கைகளையும் தமிழக அரசுக்கு அவர் முன்வைத்தார். " பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டெடுக்க தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மழை நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2 விழுக்காட்டு கீழ் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், மத்திய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அவர்களே போராட்டம் நடத்துவது வேடிக்கை என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். நீட் தேர்வைப் பொறுத்த வரை மத்திய அரசு கொண்டு வந்தது என்பதற்காக எதிர்க்கக்கூடாது, தேவைப்பட்டால், அந்தந்த மாநிலங்கள் நடத்திக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
ALSO READ நாடாளுமன்றத்தில் திமுக எழுப்பவுள்ள 5 பிரச்சனைகள் - டி.ஆர்.பாலு தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR