Tamil Nadu Latest News Updates: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான எம்.சரவணன் (Congress General Secretary Saravanan) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு (MK Stalin) இன்று கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில்,"தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vetri Kazhagam) தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026ஆம் ஆண்டில் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ஆகவே, தாங்கள் தற்போதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில்தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 


காங்கிரஸ் தரப்பு


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் ஒருவர், முதல்வருக்கு நேரடியாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. எனினும் இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எவ்வித விளக்கமோ வெளியாகவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. 


மேலும் படிக்க | விஜய்யின் கட்சியால் அதிமுகவிற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? - முன்னாள் அமைச்சர் பதில்!


பரபரப்பாகும் அரசியல் களம்


திமுக கூட்டணியில் ஏற்கெனவே ஆட்சியில் பங்கு வேண்டும் என குரல்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக விடுதலை சிறுத்தைகைள் கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவில் குரல் இதில் வலுவான ஒன்றும் எனலாம். ஆதவ் அர்ஜூனா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தபோது திமுக உடனான கூட்டணி குறித்து பேசினார். அதில் "சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா" என கேள்வி எழுப்பியிருந்தார்.


அதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்கும் முன்னரே ஆதவ் அர்ஜுனா இத்தகைய கருத்தை தெரிவித்திருந்தார். இது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் விசிக தலைவர் திருமாவளவனின் சமூக வலைதளப்பக்கங்களில் 'ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்' என்று முன்பு பேசிய பழைய வீடியோ ஒன்று மீண்டும் பதிவிடப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இதுவும் பல்வேறு சலசலப்புகளையும், விவாதத்தையும் கிளப்பியது. 


முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்று திரும்பிய உடன் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார், விசிக தலைவர் திருமாவளவன். மேலும் திமுக - விசிக உறவு பலமாகவே உள்ளது, எவ்வித முரண்களும் இல்லை என்றும் தெரிவித்தார். அந்த பழைய வீடியோ பகிரப்பட்டது தேவையற்ற விவாதங்களை கிளப்பிவிட்டது எனவும் பேசியிருந்தார். ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து குறித்து திருமாவளவனிடம் கேட்டபோது, கட்சியில் உள்ள மூத்த தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுப்போம் என பதிலளித்திருந்தார். 


இந்நிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைத்தால் கூட்டணி கட்சியினருக்கு அதிகாரப் பகிர்வு நிச்சயம் உண்டு என தெரிவித்ததுதான் மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இதில் விசிக தரப்பில் இருந்து பூதம் கிளம்பும் என எதிர்பார்த்திருக்க காங்கிரஸ் பக்கம் இருந்து புகை கிளம்பியிருக்கிறது. 


மேலும் படிக்க | ஜெயலலிதா இடத்தை பிடிப்பாரா விஜய்? திமுகவுடன் நேரடியாக மோதுவது ஏன்? 2026-ல் என்ன நடக்கும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ