தமிழ்நாட்டில் ரயிலை கவிழ்க்க சதி - காவல்துறை தீவிர விசாரணை
ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ஜான்சி என்ற மோப்பநாய் உடன் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவக்கோவில் பகுதியில் பெங்களூரு- சென்னை மார்க்கத்தில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கற்கள் வைத்துள்ளனர். அதிகாலையில், மைசூரில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய காவிரி எக்ஸ்பிரஸ் ஆம்பூர் கடந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ரயில் அந்த கற்கள் மீது மோதியுள்ளது. அப்போது அதிகாலை 3:30. வீரகோயில் அருகே ரயில் தண்டவாளத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரிய கல் மீது ரயில் மோதியதால், பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. லோகோ பைலட் அருகில் இருந்த பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி சோதனை செய்து உள்ளார்.
மேலும் படிக்க | உளுந்தூர்பேட்டை: தண்ணீர் குடிக்க குடத்திற்குள் தலைவிட்டு மாட்டிகொண்ட நாய்
இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இந்த விபத்து காரணமாக காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் 15 நிமிடம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இது தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலிருந்து ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக ஆம்பூர் வந்தனர். சம்பவ இடத்தில் ராபின் என்ற பயிற்சியாளர் உடன் ஜான்சி என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனை நடத்தப்படுகிறது.
ரயில் தண்டவாளத்தில் பெரிய கற்கள் வைத்தது யார்?, எதற்காக வைத்தார்கள். ரயில் கவிழ்க்க சதி நடந்துள்ளதா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்தால் ஏற்பட்ட சோகத்தின் வடுக்கள் கூட ஆறாத நிலையில் மேற்கு வங்கத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி தடம் புரண்டுள்ளன. இந்த சூழலில் தான் ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தில் பெரிய கற்கள் வைக்கப்பட்டு ரயிலைக் கவிழ்க்க சதி நடந்துள்ளது.
மேலும் படிக்க | பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ