வேளச்சேரி ராட்சத பள்ளத்தில் சிக்கிய ஒருவர் சடலமாக மீட்பு, இன்னொருவரை தேடும் பணி தீவிரம்
சென்னை வேளச்சேரியில் 50 அடி ஆழத்துக்கும் அதிகமான பள்ளத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களில் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். இன்னொருவர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேளச்சேரியில் உருவான ராட்சத பள்ளம்
வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள எல்.பி.ஜி கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷன் அருகே கடந்த திங்கள் கிழமை மழையின் போது திடீரென ஏற்பட்ட விரிசலால் ராட்சத பள்ளம் உருவானது. இதில், அருகில் இருந்த கண்டெய்னர், நிழற்குடையின் ஒருபகுதி, கேஸ் ஃபில்லிங் ஸ்டேஷனின் ஒரு பகுதி என அனைத்தும் பள்ளத்தில் சரிந்தது. அப்படியே கட்டுமானம் கட்டுவதற்காக போடப்பட்டு இருந்த செட்டப் கீழே விழுந்தது.
தடையை மீறி நடைபெற்ற கட்டுமான பணி
மிக்ஜாம் புயலை முன்னிட்டு கட்டுமானங்களை மேற்கொள்ள அரசு சார்பில் சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதை மீறி அங்கே கட்டுமான பணி நடந்து வந்தது. அங்கே பனி நடைபெற்ற இடத்தின் அருகில், கண்டெய்னரில் வசித்து வந்த கட்டுமான தொழிலாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 5 பேர் திடீரென உருவான ராட்சத பள்ளத்தில் சிக்கினர். அதில், 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 5வது நாளாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ்? தற்போதைய நிலை என்ன?
பள்ளத்தில் நீர் தேங்கியதால் மீட்பு பணி தாமதம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ராட்ச பள்ளம் முழுவதும் நீரால் நிரம்பியது. இதனால் பள்ளத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். உடனடியாக ராட்சத பம்ப்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியும் தொடங்கியது. இருப்பினும் இன்னும் பள்ளத்தில் நீர் தேங்கி உள்ளது. மழைநீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்ற மீட்பு பணிகளின் ஒருபகுதியாக இன்று அதிகாலை ஒரு சடலம் மீட்கப்பட்டது.
தொடரும் மீட்பு பணிகள்
அழுகிய நிலையில் இருந்த அந்த உடலை பார்த்தால் இறந்து 3-4 நாட்கள் ஆனது போல இருக்கிறது. இதனால் விபத்து ஏற்பட்ட முதல் நாளே அந்த இரண்டு பேருமே பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் கருதுகின்றனர். இன்னொருவரின் சடலத்தை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | 2015 சென்னை வெள்ளம் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்டதா? எஸ்.பி.வேலுமணி விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ