தமிழக அரசின் சிறு தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை மையம்!
-
தமிழக அரசின் சிறு தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை மையத்தில் இனைய பொதுமக்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் செய்தி குறிப்பில் வெளியிட்டுலதவது:-
"தமிழக அரசின் நிறுவனமான தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (www.editn.in) சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு கடன் திட்டங்கள் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (சூநுநுனுளு), வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (ருலுநுழுஞ) மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) இவற்றிருக்கான பல பயிற்சிகள் நடைமுறைபடுத்துகிறது.
புதியதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆதரவு கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது குறு மற்றும் சிறு தொழில் செய்யும் தொழில் முனைவோர்கள் நிதி மேலாண்மை வரிகள், வாடிக்கையாளர்களை கையாளுதல், வருவாயைப்பெருக்குதல் மற்றும் செலவினங்களை கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஆலோசனைகள் வழங்குவது அவசியமாகும்.
இவ்வாறு தொழில் செய்து வரும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவோர் மையத்தை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை (BYST)யும் இணைந்து ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை கூட்டம் நடத்த உள்ளது. நிதி, வங்கி மற்றும் மேலாண்மை துறையில் 3 வல்லுனர்கள் தொழில் முனைவோர்கள் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தொழில்முனைவோர் நுhலகம் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் வழிகாட்டி மையம் ஆகியவற்றிலுள்ளதொழில் திட்ட அறிக்கைகளையும் பயன்படுத்தி தங்களது திட்ட அறிக்கைகளை தயாரித்துக் கொள்ளலாம்.
இம்முகாம்கள் ஜூன் 2016 முதல் நடை பெற்றுவருகிறது. இதுவரை இம்முகாம்களில் இதுவரை சுமார் 1048 தொழில் துவங்க விரும்புவோர் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். மேலும் இம்முகாம் 07.09.2017, 14.09.2017, 21.09.2017 மற்றும் 28.09.2017 அன்று தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032 என்ற முகவரியில் மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் தகவலுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அவர்களை 044-22252081, 7550248758 (வேலை நாட்கள் -10 மணி முதல் 6 மணி வரை ) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்."
என தெரிவித்துள்ளது