தனித்தே போட்டி.. யாருடனும் கூட்டணி கிடையாது - சீமான்
உள்ளாட்சித் தேர்தலிலும் அதைத் தொடர்ந்து வரும் லோக்சபா தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
திருச்சியில் உள்ள ரோசன் திருமண அரங்கில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். பொதுக்குழுக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சீமான் செய்தியாளர்களிடம் பேசியது:- சட்டசபைத் தேர்தலைப் போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் தனது கட்சியான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றார். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். பஞ்சாயத்து உறுப்பினர் பதவி முதல் மேயர் பதவி வரை அனைத்து இடங்களுக்கும் எங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்திருந்தாலும் கூட 4.5 லட்சம் மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அடுத்த வரும் தமிழகச்சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாங்கள் மிகப் பெரிய கட்சியாக உருவெடுப்போம். நாங்கள் யாருடனும் கூட்டணி சேர்வது கிடையாது. தனித்தே போட்டியிடுவோம்.
100 சதவீத வாக்குப்பதிவுக்கு முன்னுரிமை அளித்த தேர்தல் ஆணையம். அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பண விநியோகத்தைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் மிகப் பெரிய சக்தியாக வளர்வோம். அதற்காக கடுமையாக உழைக்க வியூகம் அமைத்து வருகிறோம் என்று கூறினார். திராவிட கட்சிகளுக்கு மற்று கட்சியாக நங்கள் இருப்போம் என்றார்.