கடந்த ஆண்டு (2016) டிசம்பர் 4-ம் தேதி மாலை முன்னால் முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார். பாதுகாப்பு காரணாமாக ஒரு நாள் தாமதமாக  அறிவிக்கப்பட்டது என சசிகலா சகோதரர் திவாகரன் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நலம் பாதிப்பு அடைந்ததால், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோய் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. 


பின்னர் இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. எனவே தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 


ஏற்கனவே ஆர்கே நகருக்கு இடைதேர்தல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை தொடர்பாக வீடியோ ஒன்றை முதல் முறையாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.