நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் தேயிலை தொழிற்சாலை உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


கொடநாடு தேயிலை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலை தூள் தமிழகம் , கேரளா, கர்நாடகத்திற்கு என உள்நாட்டு வியாபாரத்திற்கு அனுப்பப்படுவதோடு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 


உயர் ரக தேயிலை தூளின் பல ரகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுவதால் கொடநாடு தேயிலைக்கு தனி மவுசு உள்ளது.



ஜெயலலிதா,  கோடநாடு எஸ்டேட்டுக்கு (Kodanadu Estate) வரும் போது காவல் துறை உயர் அதிகாரிகள் தங்கும் கட்டிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ள முயற்சி சம்பவம் நடைப்பெற்றுள்ளது.


இந்த கட்டிடத்தில் விலை உயர்ந்த தேயிலைத்தூள் பெட்டிகள் மற்றும் பல விலை உயர்ந்த பொருட்கள்  வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. 


இந்த கட்டிடத்தில் பூட்டு உடைத்து,  இரும்பு தடுப்பை வளைத்து உள்ளே செல்ல முயற்சி செய்யப்பட்டுளது. இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் சோலூர்மட்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 


புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த 2017ம் ஆண்டு, கோடநாடு எஸ்டேட்டில் ஒரு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


இதே பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளை முயற்சி சம்பவம் அருகில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | கொடநாடு வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR