தொடர்ச்சியாக இம்மாத இறுதியில் ஒரு வாரம் விடுமுறையா?
பல விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதன் காரணமாக, இம்மாத இறுதியில் ஒருவாரம் விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
பல விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதன் காரணமாக, இம்மாத இறுதியில் ஒருவாரம் விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக வரும் டிசம்பர் 25ம் தேதியிருந்து ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதியும், உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதியும் வருகிறது. இதையடுத்து ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு விடுமுறை.
இதனால், டிசம்பர் 25ம் தேதி புதன்கிழமை, 27ம் தேதி வெள்ளிக்கிழமை, அதன்பின்னர் சனிக்கிழமை 28ம் தேதி, ஞாயிறுக்கிழமை 29ம் தேதி, டிசம்பர் 30ம் தேதி திங்கட்கிழமை அதன் பின் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு புதன்கிழமை என இடையில் இரண்டு நாட்களை தவிர மீதம் 8 நாள் தொடர் விடுமுறை வர வாய்ப்பு உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் மட்டும் தான் இந்த விடுமுறை முடியக்கூடியது.