கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ ஆக நியமனம் செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பின்புலத்தை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது அவர் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் முதலமைச்சர் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதன் பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது., 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலராக (சிஇஓ) தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவரின் பின்புலம் குறித்து ஆராய கூடிய பணி நடைபெற்று வருகிறது.


மேலும் படிக்க | இணைந்து சேயல்படுவோம் : எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்


அவரைப் பற்றி வரக்கூடிய தகவல்கள் உண்மையாக இருந்தால் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களிலிருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவார். ஆனால் தற்போது எந்த முடிவுக்கும் நாம் செல்ல முடியாது. விசாரணை நடைபெற்று வருகிறது அவரைப் பற்றிய பின்புலம் முழுமையாக தெரிந்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டோம். இனி விரைந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.


மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு எதிராக மேல்முறையீடு; எடப்பாடி போடும் கணக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ