சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு நடைபெறுகிறது என்று மத்திய ஜி.எஸ்.டி  வாரிய தலைவருக்கு தமிழக ஜி.எஸ்.டி உதவி ஆணையர் பாலமுருகன் கடுமையான குற்றச்சாட்டுடன் கடிதம் எழுதியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி (GST Office) அலுவலகத்தில் உள்ள இந்தி பிரிவில், இந்தி மொழி எழுத, படிக்க தெரிந்தவர்கள் தான் நியமிக்க வேண்டும். ஆனால் அந்த (Hindi) பிரிவில் இந்தி தெரியாத தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களை பணியில் நியமிக்கப்படுவதாக குற்றசாற்று எழுந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. 


இந்தி திணிப்பு (Hindi Imposition) சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் நடைபெற்று வரும் இந்தி திணிப்புக்கு எதிராக விவாதங்கள் பார்த்தாலே அனைவருக்கும் தெரியும். ஒரே நாடு ஒரே மொழி என்ற மத்திய அரசின் கொள்கை தான் இதற்கு முக்கிய காரணமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விமான நிலையத்தில் கனிமொழி (MP Kanimozhi)  தொடங்கி மும்மொழி கொள்கை என இந்தி திணிப்பு எதிராக தமிழகம் களம் கண்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி உதவி ஆணையர் பாலமுருகனின் குற்றச்சாற்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


ALSO READ |  


இந்தியை ஏற்காதார் இந்தியாவை ஏற்காதவர்கள் -பிப்லப் குமார்!


எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால்....


தமிழக ஜி.எஸ்.டி உதவி ஆணையர் பாலமுருகன் இந்தி திணிப்புக்கு எதிராக எழுதிய கடிதத்தில், இந்தி தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பமில்லை. இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். எங்களுக்கு இந்தி தெரியாது. ஆனால் எங்கள் பிரிவில் வரும் அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை ஏற்படுகிறது. விருப்பம் இல்லாத ஒருவரை இந்தி பிரிவில் போட நினைப்பது கூட இந்தித் திணிப்புதான். இந்தி பிரிவில் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு பணி ஒதுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், திட்டமிட்டு தமிழ் தெரிந்தவர்களுக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வைச் சிறுமைப்படுத்தும் நோக்குடன் இந்தி பிரிவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி அலுவகத்தின் உதவி ஆணையர் புகார் தெரிவித்துள்ளார்.