சென்னை: கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்துக் கொளவதற்கான கட்டணம் 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு தற்போது 1200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. RT-PCR என்ற கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைத்துள்ளது தமிழக அரசு.


இது தொடர்பாக தமிழக மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:


Also Read | கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு


கடந்த மே 14-ம் தேதி, கொரோனா தொற்று சிகிச்சை கட்டணம் தொடர்பான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்டி-பிசிஆர் (RT-PCR) பரிசோதனைக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பரிந்துரைத்துள்ளார். இதை பரிசீலித்த தமிழக அரசு, கட்டணத்தை குறைவாக நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, கொரோனா தொற்றை உறுதிப்படுத்தும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை அரசு மற்றும் அரசால் பரிந்துரைக்கப்படும் மாதிரிகள் தனியார் ஆய்வுக் கூடங்களில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.800-ல் இருந்து ரூ.550 ஆகவும், குழு மாதிரிகளுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.


Also Read | Adi Shankaracharya Jayanti : இந்து மதத்தின் மாபெரும் சிற்பி ஆதி சங்கரரின் ஜெயந்தி 


முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட (Chief Minister's Comprehensive Insurance Scheme) பயனாளியாக இல்லாதவர்கள், தனியார் ஆய்வுக் கூடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆக நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், வீடுகளுக்கு சென்று பரிசோதனை செய்ய கூடுதலாக ரூ.300 நிர்ணயிக்கப்படுகிறது.


முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான தொகையை யுனைட்டட் இந்தியா காப்பீடு நிறுவனம் (United India Insurance) மறு பரிசீலனை செய்த பிறகு திருப்பிக் கொடுக்கும்” என்று தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு  நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR