சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொளத்தூர் பண்ணவாடியில் செல்வம் என்பவர் 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறுதிச் சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 86224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 37331 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 2212 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 47749 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம் இதன் மூலம் சீனாவை முந்தி இருக்கிறது. சீனாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 83,512 என்பது குறிப்பிடத்தக்கது.


READ | இந்திய எல்லையில் 89 புதிய புறக்காவல் நிலையங்களை திறக்கும் நேபாளம்...


இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, நடந்த பரிசோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரானா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.