நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அன்புமணி இராமதாஸ் அறிவிப்பு!!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. இதற்காக மத்திய அரசு ரூ.15,000 கோடியும், மாநில அரசுகள் பல்லாயிரம் கோடியும் நிதி ஒதுக்கியுள்ள போதிலும்,  கொரோனா வைரஸ் நோயின் புதிய பரிமாணம் காரணமாகவும், பிற நோய்களை தடுக்கும் முறைகளில் இருந்து இந்நோயை சோதித்து, தடுக்கும் முறை மாறுபட்டது என்பதாலும், அது போதுமானதல்ல.


காரோனா வைரசால் எவரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதைக் கண்டறிவதற்கான தெர்மல் ஸ்கேனர்கள், நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவச கருவிகள், கொரோனா சோதனைக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilators) முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நீக்கும் மருந்துகள் மற்றும் கொரோனா நோயை கட்டுப்படுத்தத் தேவைப்படும் பிற கருவிகளை வாங்க தமிழ்நாடு அரசுக்கு பெருந்தொகை தேவைப்படுகிறது.


தமிழக அரசின் நோய்த்தடுப்பு பணிகளுக்கு உதவும் வகையில் மருத்துவக் கருவிகளை வாங்குவதற்காக எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து முதல்கட்டமாக ரூ.3 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளேன். தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் கூடுதல் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.