கொரோனா பரவல் எதிரொலி; வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?
கொரோனாவின் 2-வது அலை, விஸ்ரூபம் எடுத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில், மொத்த பாதிப்பு தொடர்ந்து 2.5 லட்சத்தை தாண்டி வருகிறது.
கொரோனாவின் 2-வது அலை, விஸ்ரூபம் எடுத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில், மொத்த பாதிப்பு தொடர்ந்து 2.5 லட்சத்தை தாண்டி வருகிறது.
தமிழகத்திலும் அதிகரித்து வரும் கொரோனா பரவலை (Corona Virus) கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசின் மறு உத்தரவு வரும் வரையில், இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அந்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும், அன்றைய தினம் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா அல்லது தள்ளிவைக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில், நிலவரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன், கட்சி தொண்டர்கள் கூடுவார்கள். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவ்வாறு கூடுவதற்கும், வெற்றி பெற்றால் கொண்டாடுவதற்கும் அனுமதி வழங்கப்படாது என்ற நிலை உள்ளது.
ALSO READ | கொரோனா தடுப்பூசியை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள், “வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று வேட்பாளர்கள், முகவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை குறித்து தகவல்களை சேகரிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
எனவே அத்தியாவசிய பணிகள் என்ற அடிப்படையில் அடையாள அட்டையுடன் அவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வருவதில் தடை ஏதும் இருக்காது. எனவே திட்டமிட்டப்படி மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும்” என்று அதிகாரிகள் கூறினர்.
இந்தியாவில் COVID-19 மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
COVID-19 இரண்டாவது அலை மிகவும் வீரியத்துடன் பரவி வரும் நிலையில், இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 2.73 லட்சம் புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. சுமார் 20 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ALSO READ | பிரதமர் தினம் 19 மணி நேரம் பணியாற்றுகிறார்: கொரோனா ‘அரசியல்’ குறித்து பியூஷ் கோயல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR