புதுடெல்லி: உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 141 மில்லியனுக்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தினந்தோறும் ஏற்படுத்தி வருவதால், வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Also Read | சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி
அதன் அடிப்படையில் அடுத்த வாரம் திங்கட்கிழமை வரை, அதாவது மேலும் ஒரு வாரத்திற்கு டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
கொரோனா தொற்று சங்கிலியை உடைத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால், வெள்ளிக்கிழமை இரவு 10 மணியில் இருந்தே மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கினர்.
அத்தியாவசிய சேவைகளைத் தவிர வேறு எந்த செயல்பாடுகளும் நடைபெறவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் டெல்லியின் சாலைகள் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் வெறிச்சோடி காணப்படுகிறது.
Also Read | புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR