கோவை விமான நிலையத்தில் வாரத்தில் அனைத்து நாட்களும், சார்ஜாவுக்கும் 5 நாட்கள் சிங்கப்பூருக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா, சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு கண்டறிய தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை - எஸ்பி வேலுமணி!


சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரத்தியேக வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடப்படவில்லை, இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது என்று கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த முறை கொரோனா தொற்று பரவிய போது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து காணப்பட்டது. 


இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதால் நோய் தொற்று பரவலை குறித்து தற்போது பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூரில் பரவி வரும் கொரோனா தொற்று தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு சார்பில் பிரத்யேக தகவல் வந்தால் கடைபிடிக்கப்படும் என கோவை சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா தகவலாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சிங்கப்பூரில் கொரோனா


சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் மட்டும் 25,900 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் பதிவான கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையை விட (13,700) கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் ஆகும். முந்தைய கொரோனாவை விட தற்போது உள்ள கொரோனா மாறுபாடுகள் அதிகமாக பரவக்கூடியவையாக உள்ளன. மேலும் இந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இடம் கடுமையான நோயை ஏற்படுத்தும் எந்த அறிகுறியும் இல்லை என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ