தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1,477 ஆக உயர்வு!
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 365-லிருந்து 411 ஆக உயர்வு...
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 365-லிருந்து 411 ஆக உயர்வு...
தமிழகத்தில் இன்று மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... தமிழகத்தில் இதுவரை 35,741 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் ஒரு 10 ஆம் வகுப்பு மாணவன், 4 முதுநிலை மருத்துவ மாணவர்கள் உட்பட 50 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
District
|
Confirmed
|
|
Chennai | 50290 | |
Coimbatore | 5133 | |
Tiruppur | 108 | |
Dindigul | 574 | |
Erode | 70 | |
Tirunelveli | 264 | |
Namakkal | 50 | |
Chengalpattu | 350 | |
Thiruvallur | 47 | |
Tiruchirappalli | 46 | |
Madurai | 246 | |
Thanjavur | 1045 | |
Theni | 44 | |
Nagapattinam | 343 | |
Karur | 41 | |
Ranipet | 38 | |
Viluppuram | 737 | |
Thiruvarur | 527 | |
Thoothukkudi | 26 | |
Cuddalore | 626 | |
Salem | 24 | |
Vellore | 23 | |
Virudhunagar | 219 | |
Tenkasi | 419 | |
Tirupathur | 17 | |
Kanniyakumari | 16 | |
Sivaganga | 11 | |
Ramanathapuram | 10 | |
The Nilgiris | 9 | |
Tiruvannamalai | 8 | |
Kancheepuram | 18 | |
Perambalur | 4 | |
Kallakurichi | 3 | |
Ariyalur | 1 |
இதையடுத்து, கோவையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியபட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 46 பேர் குணமடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் இன்று 24 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 பேர். கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் இல்லாததால் 15 என்ற நிலையிலேயே உள்ளது. திமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 21,381 பேரும், அரசு கண்காணிப்பில் 20 பேரும் உள்ளனர்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.