தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 1520 ஆக உயர்வு!
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடன் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்.... தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் சமூகப் பரவல் மூலம் கொரோனா பாதிப்பு இல்லை என்பது ரேபிட் கிட் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதை யாரும் தடுத்து நிறுத்த கூடாது. அப்படி யாரேனும் தடுத்தால் அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகயில், இறந்த பிறகு ரூ.1 கோடி கொடுப்பது முக்கியமா? கொரோனா வராமல் தடுப்பது முக்கியமா? என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். ரேபிட் கிட் விலை விவகாரத்தில் ஸ்டாலின் மலிவான அரசியல் செய்ய வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் மொத்தம் 613 இடங்களில் கொரோனா நோய் தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன" என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
Chennai | 290 |
Coimbatore | 133 |
Tiruppur | 108 |
Dindigul | 74 |
Erode | 70 |
Tirunelveli | 64 |
Namakkal | 50 |
Chengalpattu | 50 |
Thiruvallur | 47 |
Tiruchirappalli | 46 |
Madurai | 46 |
Thanjavur | 45 |
Theni | 44 |
Nagapattinam | 43 |
Karur | 41 |
Ranipet | 38 |
Viluppuram | 37 |
Thiruvarur | 27 |
Thoothukkudi | 26 |
Cuddalore | 26 |
Salem | 24 |
Vellore | 23 |
Virudhunagar | 19 |
Tenkasi | 19 |
Tirupathur | 17 |
Kanniyakumari | 16 |
Sivaganga | 11 |
Ramanathapuram | 10 |
The Nilgiris | 9 |
Tiruvannamalai | 8 |
Kancheepuram | 8 |
Perambalur | 4 |
Kallakurichi | 3 |
Ariyalur | 1 |
Unknown | 4343 |