தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,000 என்ற எண்ணிக்கைக்கு குறைவாக பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நிலையில்,  கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது குறைந்து வருகிறது. இன்று தமிழகத்தில் 22,651 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,95,402 ஆகஅதிகரித்துள்ளது.


இன்றைய தொற்று பாதிப்பில், அதிகபட்சமாக, கோவையில் 2,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,971 பேருக்கும்,  ஈரோட்டில் 1,619 பேருக்கும், சேலத்தில் 1,187 பேருக்கும், திருப்பூரில் 1,161 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.


தமிழகத்தில் இன்று, கொரோனா தொற்ற்றால் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,128 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 33,646 பேர் கொரோனா நோயிலிருந்து குணம்டைந்துள்ளனர். iதை அடுத்து, தமிழகத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,00,306ஆக அதிகரித்துள்ளது.



மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம் : 



 



 


ALSO READ | COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR