சென்னை: நாடு முழுவதும் கொரொனா வேகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நாட்டில் COVID-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை ஆளும் கட்ஜி கட்சி சிறப்பாக பணியாற்றி வந்தாலும், அதேநேரத்தில் எதிர்க்கட்சியான திமுகவும், அரசுடன் கைகோர்த்து முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. மக்களை பாதுகாப்பது ஆளும் அரசின் கடமை மட்டுமில்லை, எதிர்க்கட்சியின் கடமையும் கூட என திமுக மீண்டும் நிரூபித்து வருகிறது. பல இடங்களில் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு பிரச்சாரமும் மற்றும் தேவையான உதவிகளையும் வழங்கி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுமட்டுமில்லாமல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalin), தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிக்கு உதவிடும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு, தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கேட்டு கொண்டார்.


அவரின் வேண்டுகோளை அடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி  உறுப்பினர்கள் தங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில்  இருந்து அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். 


இதுவரைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்பதைக் குறித்த விவரத்தை திமுக ஆதரவாளரான ஒருவர் தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துள்ளார். அதன் முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.