கோயம்புத்தூர்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy), இன்று கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், கொரோனா தடுப்புப் பணியில் கோவை மாவட்டம் முன்னணியில் உள்ளது. ஆனால் திமுக தலைவர் (DMK President) கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக (DMK) தான் என எதிர்கட்சி மீது குற்றம்சாட்டினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அவர் பேசிய முக்கிய சில கருத்துகளை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


> தமிழகத்தில் 90 நாட்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால் தான் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது


> தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியை நாள் தோறும் தீவிரப்படுத்தி வருகிறோம். 


> தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக் மாநிலத்தில் இறப்பு விகிதம் குறைந்து வறிறது.


> தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.


> சிறு குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்று தரப்பட்டுள்ளது.


> உண்மைக்கு புறம்பான பொய்யான செய்திகளை மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார்.


> அரசுக்கு உதவி செய்யாமல், சோதனையான இந்த காலத்திலும் அரசு மீது தவறான குற்றச்சாட்டை ஸ்டாலின் கூறி வருகிறார்.


> கொரோனாவை தடுக்க ஸ்டாலின் அவர்கள் என்ன ஆலோசனை கூறியிருக்கிறார். திமுகவால் தான் கொரோனா தொற்று மாநிலத்தில் அதிகரித்தது.


இவ்வாறு பேசினார். 


அதேநேரத்தில் முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் சார்பில், கோவையில் 166 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள பில்லூர் 3-ஆம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.