சென்னையில் மீண்டும் COVID-19 பாதிப்பு அதிகரிப்பு!! இன்று 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு
மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரிப்பு. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 54,122 ஆக இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 5,890 பேருக்கு கொரோனா (COVID-19) பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் தலைநகரம் சென்னையில் 1,185 பேருக்கும், பிற மாவட்டங்களில் 4,705 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக இருந்தது. மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரிப்பு.
இன்று கொரோனாவால் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைதோர் எண்ணிக்கை 2,83,937 லட்சமாக உயர்வு.
தமிழ் நாட்டில் (Tamil Nadu) மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 54,122 ஆக இருக்கிறது.
இன்றைய நிலவரம்: 17-08-2020
கொரோனா பாதிப்பு - 5890
சென்னை - 1185
மரணம் - 120
குணமடைந்தவர்கள் - 5667
பரிசோதனை செய்யப்பட்டவர்கள் - 67,532
மொத்த நிலவரம்(இன்று வரை)
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 54,122
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் - 3,43,945
சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் - 1,17,839
இறப்பு எண்ணிக்கை - 5,886
குணமடைந்து வெளியேற்றம் - 2,83,937
சோதனை எண்ணிக்கை - 37,78,778