Coronavirus News: தமிழகத்தில்இன்றைய நிலவரம் என்ன? பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் பாதிப்பு
இன்று தமிழகத்தில் 5834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 3,377 ஆண்களுக்கும், 2,457 பெண்களுக்கும் அடங்குவார்கள்.
சென்னை: இன்று தமிழகத்தில் 5834 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 3,377 ஆண்களுக்கும், 2,457 பெண்களுக்கும் அடங்குவார்கள். மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று 118 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5,159 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தி கொரோனா நோய்தொற்று நிலவரம்: 11-08-2020
பாதிக்கப்பட்டவர்கள் -5834
சென்னை - 986
மரணம் - 118
வெளியேற்றம் - 6005
சோதனை எண்ணிக்கை - 67,492
மொத்தம் எண்ணிக்கை (இன்றைய தேதி வரை)
செயலில் உள்ளவர்கள் - 52,810
பாஸ்டிவ் தொற்று - 3,08,649
சென்னை பாதிப்பு- 1,11,054
இறப்பு எண்ணிக்கை - 5,159
வெளியேற்றம் - 2,50,680
சோதனை எண்ணிக்கை- 33,60,450
அதேபோல ஆந்திராவில் செவ்வாயன்று கோவிட் -19 நோயின் எண்ணிக்கை 2,44,549 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 9,024 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 87 இறப்புகள் என மொத்த எண்ணிக்கையை 2,203 ஆக உயர்த்தின.
கேரளாவில் 1,417 பேருக்கு கோவிட் -19 நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஐந்து பேர் மரணமடைந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கையை 120 ஆக உயர்ந்துள்ளது.