108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு நன்றி கூறிய தம்பதியின் உறவினர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்னுார் அருகே கதவுகரையை சேர்ந்தவர் முருகசாமி, இவரது மனைவி அபர்ணா. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீண்டும் அபர்ணா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 1:15 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.


ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற, 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அபர்ணாவை ஆம்புலன்ஸில் ஏற்றி, அன்னுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 


ALSO READ | இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதி விலையில் பிரியாணி


வரும் வழியில் பிரசவ வலி அதிகமானதால், அங்கேயே வாகனத்தை நிறுத்தி, அவசர மருத்துவ உதவியாளர் தனபால், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ராஜசேகர் ஆகியோர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். 


இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது, தாயும், குழந்தையும் அன்னுார் அரசு மருத்துவமனையில் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெண் குழந்தை 2 கிலோ 300 கிராம் எடையுடன் நலமாக உள்ளது.ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு, தம்பதியின் உறவினர்கள், நன்றி தெரிவித்தனர்.


ALSO READ | சென்னை; ஊழியரை கட்டிப்போட்டு ரயில் நிலையத்தில் ரூ.1 லட்சம் கொள்ளை


ALSO READ | பூனைக்கு வளைகாப்பு நடத்திய கோவை குடும்பம் !


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR